வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில், அந்த குழுவின் அறிக்கை அண்மையில் வடமாகாண சபையில்Read More →

இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி உனா மெக்கலி தெரிவித்துள்ளார். ருவிட்டர் செய்தி ஒன்றில் அவர்,ஒற்றுமை மாத்திரமே இலங்கையை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும். இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்தது. எனவே இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெறுக்கத்தக்க வன்முறைகள் இடம்பெற்றுள்ளமையை அடுத்தே ஐக்கிய நாடுகள் அதிகாரியின் கருத்துகள் வெளியாகியுள்ளன.Read More →

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அமைச்சர்கள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியாகி வட மாகாண அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பாக மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு நேற்று காலை தொலைபேசியூடாக தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு,Read More →

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயRead More →

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கைக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள ஐந்து நாடுகள் கட்டாருடான ராஜதந்திர உறவுகளை நிறுத்தியுள்ளன. இதன்காரணமாக கட்டார் அரசாங்கம் பல்வேறு நெருக்கடி முகங்கொடுத்துள்ளது. இதில் பிரதானமாக கட்டார் நாட்டுக்கு சொந்தமான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டார் எயார்வேஸ் உட்பட பல விமான சேவை நிறுவனங்கள், விமான பயணங்களை இரத்து செய்துள்ளமையினால் பல விமானங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.Read More →

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் டிக்கோயா வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 12ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோயா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். எனினும் இந்த வைத்தியசாலை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வைத்தியசாலையை திறக்கும் போது அதற்கு தேவையான எந்தவிதமான பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும்Read More →

மனதிற்கு இதமளிக்கக்கூடிய விடயமும், நீண்டகால எதிர்ப்பார்ப்பும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வட பகுதியில்Read More →

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் பழைய இரும்புக்காக திருடப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ எதிர்வரும் 15 ஆம் திகதி பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கோத்தபாய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், குறித்த சீமெந்து தொழிற்சாலை பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த பழைய இரும்புகளை ராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்த தாமே உத்தரவிட்டதாக குறிப்பிட்டார். எனவேRead More →

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இந்த சந்திப்பு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தகரான சமன் பிரியங்கரவுடன் அருந்திக பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அதேவேளை ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்கவும் ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.Read More →

மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித்Read More →