ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமை தொடர்பான தமது முன்னேற்றங்களை ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு அறிவித்துவந்துள்ளது. இம் முறையும் அதனை முன்வைக்கவுள்ளது. அதேவேளை மனித உரிமை தொடர்பில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடினும்Read More →

சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலும் மெக்ரே தயாரித்துள்ள விவரணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே சனல்4 விவரணம் நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள் வரை உரையாற்றுமாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்புRead More →

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம், பாரிய உள்ளுர் மற்றும் சர்வதேச சவால்களை சந்திக்கவுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் தமது அரசியல் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கொழும்பு மாநாட்டுக்கு வராத காரணத்தினால் மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கை, இந்தியாவை தவிர்த்து சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அதிக உறவை ஏற்படுத்த முனையுமாயின்Read More →

வருவதன் விளைவாகவே சில நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போருக்கு பின்னர் ஒரு சிலரே இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். புலம்பெயர் மக்களின் பெரும்பான்மையானவர்கள் சகல வழிகளிலும் சிறந்தவர்களாக உள்ளனர் என நினைக்கின்றேன். ஒரு சிறிய சதவீதமானவர்களே பயங்கரவாதத்தை ஆதரித்து அதற்கு நிதியுதவிகளையும் செய்து வருகின்றனர். தற்போது மோதல்கள் முடிவடைந்து விட்டன. சிலRead More →

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என சனல் 4 ஊடகவியலாளர் ஜெனத்தன் மில்லர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மில்லரின் கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஒவ்வொருவரும் உவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நாங்கள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அவ்விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஒருநாளோ. இரண்டு நாளோ அல்லது ஐந்து வருடமோ நடைபெற்றRead More →

இசைப்பிரியா… சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம்.  இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். இதோ அவரது வாக்குமூலம்.. அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசிலRead More →

ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த தகவலை பிரித்தானிய பிரதமரின் டௌனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. டேவிட் கமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணித்தியாலம் நீடித்தது . இதன்போது டேவிட் கமரூன் தமது கருத்துக்களை நேரடியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மஹிந்தRead More →

வலி.வடக்கு மக்கள் மீள்­கு­டி­யேற்­றத்தை வலி­யு­றுத்தி கடந்த நான்கு நாட்­க­ளாக நடத்தி வரு­கின்ற தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் நேற்று கலந்­து­கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் அந்த மக்­களின் அவ­லங்­களைக் கண்டு கண்ணீர் மல்­கிய உருக்­க­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது. மீள்­கு­டி­யேற்­றத்தை வலி­யு­றுத்தி வலி.வடக்கு மக்கள் நடத்தி வரு­கின்ற தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் கலந்­து­கொண்ட கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் அம்­மக்கள் எம்மை எமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறுRead More →

பொதுநலவாய சிறிலங்கா மாநாட்டினால் சிங்கள தேசம் விழாக்கோலம் பூண்டிருந்த சமவேளை தமிழர் தேசம் போர்கோலம் பூண்டு அனைத்துலகத்தின் பார்வையினை ஈட்டியுள்ளது. நில அபகரிப்புக்கு எதிரான வலிமாகம் மக்களின் போராட்டமும், காணாமல் போனோரது உறவுகளினது யாழ் போராட்டமும் , சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது. பொதுநலவாய மாநாடு அமர்வு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் அதன் சம்பிர்தாய நிகழ்வுகளின் காட்சிப்பதிகள் பின்தள்ளப்பட்டு, வட தமிழீத்தின் மக்கள் போராட்டம்Read More →

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட விமானத்தின் மூலமாகவே அவர் வடக்கிற்கு புறப்பட்டுள்ளார் என்றும் அவருடன் ஒரு குழுவினரும் வடக்கிற்கு சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனைRead More →