வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் இருவர் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் எனக்குத் தெரியாது. எனினும், எனதுRead More →

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரியே, ஞானசார தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரின் சட்டத் தரணிகள் ஊடாகவே அவர்,அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நாட்டில் பல்வேறு சர்ச்சைகளைRead More →

நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் என்று பொதுபலசேனாஅமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் அவ்வமைப்பின்தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயேஅமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகே இவ்வாறுவலியுறுத்தினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தொழில்சாலையொன்றில் தீவிபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னணியில்Read More →

வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சின் அதிகாரியொருவர், இதற்கான கோரிக்கை கடிதம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார். வடக்கு, வடமத்திய உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தனிநபர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைRead More →

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 – 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய்Read More →

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் மோசமான இனவாதிகள் என்றும் அவர்களைக் கைது செய்யுமாறும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் இனவாதக் குழுவினரை பிடித்துக்கொள்ள முடியும். அங்குதானே அனைவரும் உள்ளனர். இனவாதப் பிரிவினர் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியிருக்கின்றனர்? மிகப்பெரிய இனவாதியான விக்னேஸ்வரன் அங்கு இருக்கின்றார். அவரே இனவாதப் பேச்சுக்களைப் பேசுகிறார். அவரைப் பிடிப்பதாக யாராவது கூறியிருக்கிறார்களா? “பொதுபல சேனாவா அல்லது வேறு யாரும்Read More →

நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டேதவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்தஅணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணைய முடியாமல் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்றஉறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது எம்மை அமைப்பாளர்பதவியிலிருந்து நீக்கியதையும் பொருட்படுத்தாது கடந்த நாடாளுமன்றத்Read More →

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை சம்பிக்கவே மறைத்து வைத்திருக்கின்றார் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுமத்திய குற்றச்சாட்டை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளார். ஒரு காலத்தில் மிகச் சிறந்த முக்கிய கட்சிகளாக திகழ்ந்து தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் அனாதைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை. பொதுபல சேனாவை உருவாக்குவதற்குRead More →

போரின் போதும், போருக்குப் பின்னரும் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்றுRead More →

இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய சந்தையை வரிகளற்றRead More →