ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ இதன்படி இரத்தினபுரி மாவட்டம் – தபால் வாக்குகள் பெயர் சதவீதம் % வாக்குகள்   மஹிந்த 56.6% 11864 மைத்திரிபால 43.2% 9053 யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி மைத்திரிபால சிரிசேன – அன்னம் –Read More →

  ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 லட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர். நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.Read More →

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிப்பதற்காக சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது. எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →