தமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் மீது கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.Read More →

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, காஷ்மீர் பற்றிய கனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்து பேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில்Read More →

தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20–ந் தேதி உத்தரவிட்டது. அனைத்து கட்சி கூட்டம் அத்துடன், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்தியRead More →

காவிரியில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? என்பதை விளக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்Read More →

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக் காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுவதால் 110 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கியது. சம்பா சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்காததால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர் வரத்துRead More →

நேற்று நடைபெற்ற நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த விக்னேஷ் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ‘காவிரி உரிமை மீட்பு பேரணி’ என்ற பெயரில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஊர்வலம் நேற்று தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சினிமாRead More →

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை பிரதமர் நரேந்திர‌ மோடி சந்திக்க மறுத்துவிட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அந்திருப்தி அடைந்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.Read More →

காவிரி பிரச்சினையால் வன்முறை ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. காவிரி பிரச்சினையால் வன்முறை காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதலில் 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டுRead More →

வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு ராஜீவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை அறிந்துRead More →

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறைச்சாலையில், வடமாநில ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இரும்புக்கம்பியால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார். வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ராஜேஸ் கண்ணா என்ற கைதியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் பேரறிவாளனுக்கு கையில் பலத்த காயமும், தலையில் சிறிய காயமும் ஏற்பட்டது. இதையடுத்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,  மருத்துவர்கள் சிகிச்சை அளித்துRead More →