இலங்கை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கனடா ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை சென்றடைந்தார். கனடா மார்க்கம், பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம்சார்ந்த சந்திப்புகளையும், கனடா அரச மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா சென்றடைந்தார். மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி மற்றும் கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். முதலமைச்சர் நாளை முதல்Read More →

நவம்பர் 27, 2016 சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்! இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால்Read More →

இலங்கை பயங்கரவாத இனப்படுகொலை அரசானது சுவிஸின் சூரிச் Bulach நகரத்தில் நடாத்திக்கொண்டிருக்கும் Sri Lanka t food and culturel festival நிகழ்வை புறக்கணித்து சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். தமிழின அழிப்பை மூடி மறைத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இலங்கையின் செல்வாக்கை பெருக்குவோம் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாத அரசானது சர்வதேச ரீதியில் இப்படியான நிகழ்வுகளை நடாத்துவதன் மூலமாகRead More →

தாய்மொழிக்கல்வியின் தேவையை உணராமல் ஆங்கிலச் சுழலில் சிக்கிகொண்டதின் விளைவை இன்று பல இனங்கள் உணரதொடங்கியுள்ளதின் எதிரொலியே UNESCO போன்ற அமைப்புகளைத் தாய் மொழிக்கல்வியின் அவசியத்தைப் பரப்புரைசெய்து தூண்டியது. இருமொழிக் கல்வியின் சாதகப் பாதகங்கள் வெகுவாக விவாதிக்கப் படும் காலம் இது. மாற்று மொழிக் கல்விப் பாதையில் பயணிப்பவர்களுக்கு கவனச் செறிவு, நினைவாற்றல், மாற்றங்களை ஏற்க்கும் பக்குவம், பல்பணி திறன் மற்றும் உலகக் கலாச்சாரங்களோடு உறவாடும் வாய்ப்பு என எல்லாம் மேம்படுவதாக ஆய்வுகள் கூருகின்றன. இவர்களின் உலகம் விரிவடைவதோடு சுயமரியாதையும் விவேகமும் சேர்ந்தேRead More →

கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். ஐ.நாவில் தற்போது 32ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரையில் கிடைக்கவேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேசRead More →

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் இன்று வரை சர்வதேசம் மௌனம் காத்து வருவதோடு, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் செயற்பாடுகளிலும் பல்வேறு நாடுகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து மாணவர்கள் தமிழகத்தில் எழுச்சிப் பேரணியினைRead More →

ஈழத் தமிழினத்துக்கான நீதியினை வென்றடைவதற்குரிய அனைத்துலக பொறிமுறையும், அரசியற் தீர்வுக்கான வழிமுறையோடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு நிறைவுகண்டது. நா.தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு டிசெம்பர் 4,5,6 ஆகிய நாட்கள் நியு யோர்க்கிலும், லண்டனிலும் இடம்பெற்றிருந்தது. புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்திருந்தனர்.Read More →

தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றநிலையில் சுவிஸ் நாட்டிலும் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றது. சுவிஸ் Fribourg மாநிலத்தில் forum மண்டபத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றி .ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.Read More →

அரபு நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் இலங்கை அரசாங்கம் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்தழித்து தரைமட்டமாக்கியுள்ளது. ஆனால் உலக தேசம் எங்கும் இன்று மாவீரர்களுக்கு தமிழீழ மக்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றார்கள். இதன்படி இன்று டோகா கட்டாரிலும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.Read More →

தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. களமாடி வீரகாவியமான மாவீரர்களின் உருவப்படங்களை வைத்து, விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துப்பட்டுள்ளது.Read More →