பெலீஸ்(Belize) நாட்டில் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரொரன்ரோவைச் சேர்ந்த 52 வயதான குறித்த அந்த பெண்ணும், அவரது காதலரான அமெரிக்காவைச் சேர்நத 36 வயது ஆணும், மத்திய அமெரிக்க நாடான பெலீஸில் காணாமல் போயிருந்தனர். அதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக அவர்களைத் தேடி வந்த அந்த நாட்டுக் காவல்த்துறையினர், அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றினுள்Read More →

சமூகத்தில் வறுமையினை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் ஒன்றை கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பரீட்சித்துப்பார்க்க உள்ளது. இதற்காக அது மேற்கொண்டுள்ள இந்தப் பரீட்சாத்த திட்டமானது, குறைந்த வருமானம் பெறுவோர் தமக்கான அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான வருமனத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வருமானம் அற்றோருக்காக தற்போதும் சமூக நலத் திட்டங்கள் நடப்பில் உள்ள நிலையில், அவற்றை விடவும் அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்தும் இந்த புதிய திட்டம் பலன்மிக்கதாகRead More →

ஸ்காபரோவின் L’Amoreaux குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Finch avenue மற்றும் Victoria Park avenue பகுதியில் அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்த்துறையினர் அங்கு விரைந்திருந்தனர் என்றும், அங்கு காயமடைந்த நிலையில் எவரும் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும்,Read More →

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் நேற்று கனடா நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. தனது பக்கத்து வீட்டவரான ஜெயராசன் மாணிக்கராஜாவுடன் முரண்பாடு காணப்பட்டது. தனது மனைவியை அவர் தொடர்ந்து அவமதிப்பதாக உணர்ந்தேன்.Read More →

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சூதாட்டக்காரரான பாஸ்கர் முனியப்பா என்பவர் சக்தி வாய்ந்த ஆன்மீகவாதி, மற்றும்Read More →

கனேடியர்கள் இருவரின் பெயர் விபரங்கள் அமெரிக்காவினால் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமெரிக்கா கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளின் பட்டியலில் 24 வயதான ஃபாரா மொஹமட் ஷிர்டொன் மற்றும் 30 வயதான தரேக் சாக்கீர் ஆகிய இரண்டு கனேடியர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு கனேடியர்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும்,Read More →

Ajax பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் 10 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாகனம் ஒன்றினால் மோதப்பட்டே அவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் காணப்பட்டார் என்றும், சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் அவரை உடனடியகாவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Williamson Drive மற்றும் Audley வீதிப் பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுமியை மோதியதாகRead More →

வீடு வாங்கும் வெளிநாட்டவர்களிடம் இருந்து 15 சதவீத வரியினை அறிவிடும் ஒன்ராறியோ அரசாங்கத்தின் திட்டத்தை கனேடிய மத்திய அரசாங்கம் வரவேற்றுள்ளது. ஒன்ராறியோ அரசாங்கத்தின் இந்த திட்டங்கள் தொடர்பில் தாமும் ஏற்கனவே பரந்துபட்ட அளவில் ஆராய்ந்துள்ளதனால், இந்த அறிவிப்பு தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவின் இந்த திட்டங்கள், விரைவில் ரொரன்ரோ வீட்டுச் சந்தையில் ஒரு நல்ல நிலையினை ஏற்படுத்தும்Read More →

ஸ்காபரோவின் Dorset Park பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் அளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சனிக்கிழமை மாலை 6.15அளவில் வடக்கு கெனடி வீதி மற்றும் புரோகிரஸ் அவனியூப் பகுதிக்கு அவசர மீட்ப்புப் படையினர் வரவழைக்க்பபட்டனர். அவர்கள் அங்கு சென்ற போது ஆண் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுச் காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவரை கொண்டுRead More →

வீட்டு விலை அதிகாரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். ரொரன்ரோ உட்பட கனடாவின் வேறு சில பெரு நகரங்களிலும் இந்த வீட்டுவிலை அதிகரிப்பானது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இவ்வாறு கூறியுள்ளார். இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இவ்வாறானRead More →