கனடா டொராண்டோவில் உள்ள ஸ்காபரோ பொது மருத்துவ மனையில் அறிவிப்புகளை ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனம் ஆகிய மூன்று மொழியில் எழுதி வைத்துள்ளார்கள். தமிழில் நாலு வரியில் எழுதியிருப்பதை சீனமொழியில் இரண்டு வரியில் எழுதி விடுகிறார்கள். நோயாளிக்கு ஆங்கிலம் தெரியுமா என கேட்டு தெரியாவிட்டால் தமிழ் மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்கிறார்கள். மருத்துவ மனையை கோயில் போல வைத்திருக்கிறார்கள். ஒரு தும்பு துரு கிடையாது. ஊழியர்கள் அன்பாகப் பேசுகிறார்கள். நோயாளியின் பெயர்,Read More →

தமிழ் இன அழிப்பின் மறக்க முடியாத நாளாய் வலியோடும் வடுக்களோடும் கறுப்பு யூலை 83இன் 30ஆம் ஆண்டை நினைவுகூருகின்றனர் கனடியத் தமிழர். ஈழத் தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட சிறி லங்கா அரசின் தமிழர் மீதான திட்டமிட்ட படுகொலைச் செயல் இதுவாகும். திட்டமிடப்பட்ட வகையில் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் யூலை 24 முதல் 29 வரை தமிழர் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. 3000 தமிழர்கள் கொல்லப்படவும் ஆயிரக்கணக்கானRead More →

உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு எதிர்வரும் 27ம் நாள் 2013 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square – Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை,Read More →

கனடா அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் பட்டியலில் இலங்கைத் தமிழரான ராதிகா சிற்சபேசனின் பெயரும் அடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்த தகவல்களை கனேடிய ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் சமூகத்தில் இருந்து முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராதிகா சிற்சபேசனின் பெயரும் உள்ளது. இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. இதில் முதல்Read More →

ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் முதன்முறையாக தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி ஈழம் சாவடி இம்முறை அமைகிறது. பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைகிறது. கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இவ் மூன்று நாள் விழாவில் அமையும் 13 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைவது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள்Read More →

பங்கேற்பாளர், தன்னார்வத் தொண்டர், புரவலர், கலைஞர், அறிஞர், விருந்தினர் என ஆயிரக் கணக்கான தமிழரால் வண்ணமயமாயும் தமிழ் எண்ணமயமாயும் நிறைந்து காணப்பட்டது ரொறன்ரோ மாநகரின் மையம். யூலை 4 – 7 வரை நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 26ஆவது ஆண்டு விழா முன்னெப்போதும் இல்லாத அளவு சிறப்புகளோடு கனடியத் தமிழர் பேரவையால் கனடாவில் முதன் முறையாக நடத்தப்பட்டது. சொனி நடுவத்தில் முக்கிய நிகழ்சிகளும் நோவோரெல் விடுதியில்Read More →

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக்குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் மட்டுமே மற்றைய நாடுகளும் கனடாவைப் பின்பற்றும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பிபிசி தமிழோசைக்கு வழங்கியுள்ளRead More →

வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) 26 வருட சரித்திரத்தில் முதல் முதலாக எதிர்வரும் சுலை 4-7 ம் தேதிகளில் சோனி டடுவத்தில் நடக்கவிருக்கும் தமிழ் விழாவிற்க்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விழா வெற்றியாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய செய்தி பின்வருமாறு: அன்பிற்குரிய வட அமெரிக்கா வாழ் தமிழ்ச் சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்புரிமையுடன் கூடிய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில்Read More →

நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை Hotel Novotel Toronto Centre,Read More →

கனடாவின் பிரம்டன் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள். காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதுடன், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பையன்களும்,Read More →