G7 மாநாட்டை அடுத்த ஆண்டு கனடாவில் நடாத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தமையை ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான G7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள கியூபெக் மாநிலத்தின் “லா மல்பாயி” நருக்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு மாநாடு நடாத்தப்பட உள்ள பகுதிகளைப் நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குRead More →

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கனடாவின் பாதுகாப்பு கொள்கை தொடர்பான மேம்பாட்டுத் திட்டம் ஒட்டாவாவில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெருமளவான இராணுவ பிரதானிகள் மத்தியில் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு அறிக்கையாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் வெளியிட்டு வைத்துள்ளார். இந்த புதிய திட்டத்தில் இராணுவத்துக்கான பல்வேறு புதிய ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கனேடிய இராணுவத்துக்காக மேலும் 62 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 20Read More →

கத்திக் குத்து்ச சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஆண்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ரொரன்ரோ நியூ மார்க்கட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் தொடர்புபட்ட ஜோன் ஜான்சன் மற்றும் மைஹர் சராம் ஆகிய இருவருக்குமே ஆயுள் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமான மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 65 வயதான றொனிடி றோஸ்பொறோ என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.Read More →

கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள கனடாவின் 150 பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 30 நிமிட வான வேடிக்கை, சிறப்பு ஒளிக்கீற்று காட்சிகள், பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள், பண்பாட்டு கண்காட்சி நிகழ்வுகள், பிரமாண்ட உணவுப் பந்தல்கள், பல்சுவை கலை நிகழ்வுகள் என்று பெருமளவான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் யூலை முதலாம் நாள் “கனடா டே” அன்று, ஃபோர்ட் கல்கரியில்Read More →

அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அதிகரிப்பது குறித்து ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒன்ராறியோ மக்களுக்கான குழந்தைகள் பராமரிப்புச் சேவைகளை மேலும் இலகுவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர், தற்போது இருப்பவற்றிற்கு மேலதிகமாக மேலும் 45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.Read More →

கனடா அதன் 150ஆவது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதன்மை நிகழ்வுகளை தலைநகர் ஒட்டாவாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஒட்டாவா நகரபிதா, கனடாவின் 150ஆவது பிறந்தநாளின் முதன்மை நிகழ்வுகளை ஏற்று நடாத்தும் நகரம் என்ற வகையில்,அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாத்தியமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்குRead More →

ஒன்ராறியோ ஏரியில் சனிக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த படகோட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லோயலிஸ்ட் பிராந்தியப் பகுதியில், ஒன்ராறியோ ஏரியின் ஆம்ஹேர்ஸ்ட் ஐலன்ட் இற்கும் கிரேப் ஐலன்ட் இற்கும் இடைப்பட்ட பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்துபோனதாக சனிக்கிழமை மாலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து ஒன்ராறியோ மாநில காவல்த்துறையினரும் உள்ளூர் அவசர மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். ஏரியினுள் கவிழ்ந்த அந்த படகில் இரண்டு பேர் இருந்த நிலையில்,Read More →

ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராக நியமிக்க்பபட்டுள்ள நிலையில், அவரின் அந்த நியமனம் தொடர்பில் எதி்ர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் முதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக ஸ்டீஃபான் டியோன் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரின் அமைச்சுப் பதவி கிரிஸ்டியா ஃபிரிலாட்ரிற்கு மாற்றி வழங்கப்பட்டதுடன், ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யேர்மனிக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கானRead More →

ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். Don Mills வீதி மற்றும் Steeles Avenue பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில், இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்ததாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும், மற்றையவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.Read More →

கனேடிய றோயல் வங்கி கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. King Street Westஇல், Bay street மற்றும் Yonge street ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த வங்கி அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. உயர் மின் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்து பெரும் திரளாக கரும்புகை வெளியேறிய நிலையில், உடனடியகாவே அந்த கட்டத்தில் இருந்த அனைவரும்Read More →