பிரிட்டிஷ் கொலம்பியா 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்று அமைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இம்முறை இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை முதல்வர் கிறிஸ்டி கிளார்க் அமைத்துள்ளார். எனினும் அவர் அமைத்துள்ள இந்த அரசு நிலைக்குமா என்பது இன்னமும் சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ள நிலையில், 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்றைய நாள் அவர்Read More →

ஸ்காபரோவின் Bay Mills Boulevard மற்றும் Birchmount வீதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதிப் பகுதியில் அமைந்துள்ள Tam O’Shanter குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 5.30 அளவில் பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர் என்றும், கை மற்றும் கால் பகுதிகளில் காயமடைந்த அந்த இருவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் ரொரன்ரோRead More →

Vaughan பகுதியில் உள்ள பேக்கரி ஒன்று இன்று அதிகாலையில் தீக்கிரையாகியுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டர்மில் அவனியூ பகுதியில் அமைந்துள்ள இந்த பேக்கரியில் அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், வேகமான பரவிய அந்த தீ அந்த பேக்கரிக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அந்த கட்டிடத்தினுள் யாரும் இருக்கவில்லை என்றும், அதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றுRead More →

சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Esplanade ற்கு வடக்கே, Church Streetஇல் வீதிக்கு கீழாக உள்ள நிலக்கீழ் வினியோக மற்றும் கழிவு நீர்ப் பாதைக்கான பகுதி ஒன்றினுள் நேற்று முற்பகல் 9.30 அளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதி மீது அமைக்கப்பட்டிருந்த மூடி சுமார் ஐந்து அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், பாரியRead More →

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஃபின்ஞ் மற்றும் இஸ்லிங்டன் அவனியூ ஆகியவற்றிற்கு அருகில் உள்ள Blue Haven Crescent இல் அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், குறித்த அந்த நபர் வாகனத்தினுள் வைத்து அல்லதுRead More →

ரொரன்ரோவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். Innisfil இல் Shore Acres Drive ற்கும் Line 14ற்கும் இடைப்பட்ட பகுதியில், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், வாகனம் ஒன்றின் பக்கவாட்டில் இன்னொரு வாகனம் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று அருகே இருந்த கம்பம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளதாகவும்Read More →

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் உணவகம் ஒன்று தீக்கிரையானதுடன், அருகில் இருந்த வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன. மேற்கு டண்டஸ் வீதி மற்றும் யூனிவேசிற்றி அவனியூப் பகுதியில் அமைந்துள்ள “Ryus Noodle Bar” எனப்படும் உணவத்தில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது. பிற்பகல் 1.30 அளவில் உணவகத்தில் ஏற்பட்ட அந்த தீப்பரவல் பின்னர் அருகில் இருந்த வீடுகள் சிலவற்றுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பரவRead More →

கனடாவில் கடந்த மாதத்தில் புதிதாக முழுநேர வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஆச்சரியகரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் காட்டுகின்றன. கடந்த மாத புள்ளிவிபரங்களின் படி சுமார் 77,000 பேருக்கு முழுநேர வேலைவாயப்பு கிடைத்துள்ளதுடன், பெருமளவானோருக்கு பகுதி நேர வேலைகளும், வெவ்வேறு வகையிலான வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அளவில் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக் ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவானோருக்கு வேலைRead More →

பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ள நிலையில், அதனை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதிக்கு சென்று சேரவேண்டிய அந்த சிறியரக விமானம், உரிய நேரத்தில் அங்கு சென்றுசேரத் தவறியதை அடுத்து, அது காணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து தேடுதல் மீட்பு சிறப்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வழிகளிலும் தேடுதல் நடவடி்ககைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிரேன்புரூக் பகுதியில்Read More →

மிசிசாகாவின் கெனடி வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், காவல்த்துறையினர் அது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அந்த வீட்டினுள் இருவர் இருந்த போதிலும், அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், சம்பவம் இடம்பெற்றRead More →