சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Esplanade ற்கு வடக்கே, Church Streetஇல் வீதிக்கு கீழாக உள்ள நிலக்கீழ் வினியோக மற்றும் கழிவு நீர்ப் பாதைக்கான பகுதி ஒன்றினுள் நேற்று முற்பகல் 9.30 அளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதி மீது அமைக்கப்பட்டிருந்த மூடி சுமார் ஐந்து அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், பாரியRead More →

போரின் போதும், போருக்குப் பின்னரும் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்றுRead More →

இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய சந்தையை வரிகளற்றRead More →

முஸ்லிம்களுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிடின், ஜெனிவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம், அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். “முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும் மிகவும் ஆணித்தரமாகவும்Read More →

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையோ அல்லது கண்காணிப்பாளர்களையோ இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் கடந்த அரசாங்கம் பல்வேறு சர்வதேச நிபந்தனைகளுக்கு இணங்கியிருந்தது. இதனால் இலங்கை சர்வதேச ரீதியில் சில விடயங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிர்ப்பந்தம்Read More →

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்தRead More →

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவி ஒருவர், பாடசாலை அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அபாண்டமானது, அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அத்தோடு பாரதிபுரம் பாடசாலையில் அக்காலப்பகுதியில் விசாரணைகுழுவின்Read More →

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவர் இந்த பிக்குவை மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் மறைத்துள்ள அரசியல்வாதி யார்Read More →

இனவாதத்தை தூண்டும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ” காவியுடை அணிந்த சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இனவாத மதவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள். அவ்வாறான நபர்களை நான் பௌத்த பிக்குகள் என கூறுவதில்லை. காவி உடை தரித்தால் கௌதம புத்தரின் கொள்கைகளை பின்பற்றி அதன் வழி நடக்க வேண்டும்Read More →

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஃபின்ஞ் மற்றும் இஸ்லிங்டன் அவனியூ ஆகியவற்றிற்கு அருகில் உள்ள Blue Haven Crescent இல் அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், குறித்த அந்த நபர் வாகனத்தினுள் வைத்து அல்லதுRead More →