பல மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியின் போது கோத்தபாய ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு மோசடியில் இருந்து அவரை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகளை, இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள சிலர் ஆரம்பித்துள்ளதாக நல்லாட்சியை நேசிக்கும் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ராஜபக்சர்கள் தங்கள் பெற்றோர்களின் கல்லறை மாளிகையை பொது மக்களின் பணத்தில் நிர்மாணித்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். தங்காலையில்Read More →

தமது அண்மைய உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தாம் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், இந்த உரை திரிபுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை பிழையாக பயன்படுத்தி தம்மீது சேறு பூசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் படைவீரர்கள் தொடர்பிலான தமது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என அவர்Read More →

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியிருந்த நிலையில், வட மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் விஷேட அதிரடிப்படைப் பிரிவுகளும், பொலிஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் விஷேட அதிரடிப்படை அணிகள்Read More →

வடக்கு, கிழக்கு பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவி நாட்டின் நிர்வாகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு கிழக்கில் இன்று அரசாங்கத்தின் நிர்வாகம் இல்லை என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன குற்றம் சாட்டினார். சமகால நிலைமைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். நாங்கள் தேர்தலை நடத்த வாக்களிக்கின்றோம். மக்கள் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடத்தி மக்களுக்கு தங்களதுRead More →

வடக்கில் தற்போது பொலிஸார் வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வற் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கப்பம் வழங்கி சபையில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டு கடந்த அரசாங்கத்தால் அணைக்கப்பட்ட தீயை மீண்டும் எரியச்செய்து வருவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். வடக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் 2015 ஜனவரி மாதத்திற்குRead More →

மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தை பொலிஸார் ஏன் மூடி மறைக்க முனைந்தார்கள் என்பது பாரியதொரு கேள்வியாக உள்ளது. மாணவர்கள் ஓடி ஒழிக்கப் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தவில்லை, அதனாலேயே சுட்டோம் என பொலிஸார் கூறுவதிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மோட்டார் சைக்கிள் ஓடுபவர்களுக்குப்Read More →

சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது. எனினும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அது தொடர்பில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. நுகேகொடையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணைந்துக் கொண்டு நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். வரி சுமையை நாட்டு மக்கள் மீது திணிக்க வேண்டாம். பொருளாதாரத்தை கட்டியொழுப்பRead More →

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது கடந்த வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று, சம்பவம் நடந்த கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு,அழைத்து வரப்பட்டு, விசாரணை செய்யப்பட்டனர். இதன்போது, பொலிஸார் நின்று சுட்ட இடமான குளப்பிட்டி சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரை அவர்கள் சரியாக அடையாளங் காட்டினர். அவர்கள் காட்டிய அடையாளங்களின் அடிப்படையில்,Read More →

ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் எழுந்து ஓடினார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டம்Read More →

பிரிக்கப்படாத நாட்டை உருவாக்கும் நோக்கத்திலேயே புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிக்கும் ஒரு செயல் இல்லாத போதிலும், சமஷ்டியை வைத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது அதிகாரப் பரவலாக்கத்துடனான சமஷ்டி முறையைக் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பாகRead More →