தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சுயாட்சியையும், ஜனநாயகத்தையும் மற்றும் நியாயத்தையும் வழங்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக வடக்கில் நடைபெறும் எழுச்சியை நிறுத்த முடியாது என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில் தமிழ் மக்கள் கொலை செய்து கொண்டு தாமும் தற்கொலைRead More →

அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர்சிலையை நீதிமன்றத்தினூடாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் தமிழர்கள் ஆத்திரப்பட்டு ஆவேசப்படக்கூடாது என அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் நேற்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று பலவந்தமாக நிறுவப்பட்டமையினால் அப்பிரதேச முஸ்லிம்கள்இ தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. இப்பிரச்சினை தொடர்பாக இறக்காமம் பிரதேசவாசிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் இன்று (30) இறக்காமம் ஸ்ரீRead More →

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் இவ்வாறான கெடுபிடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்தRead More →

செந்தூரன் என்ற பாதாள உலகக் குழுத் தலைவர் தலைமையிலேயே ஆவா குழு இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கப்பம் பெற்றுக்கொள்ளல், கொள்ளையிடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த ஆவா குழு ஈடுபட்டு வருகின்றது. புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் ஆவா குழுவின் தலைவர் செந்தூரன் என தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் ஆவா குழுவின் தலைவர் கே.வினோதன் என்ற நபர் கைதுRead More →

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப் பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான கோப் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரையான வேலைத் திட்டத்தைக் கொண்டு வர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கோப் குழு விசாரணை அறிக்கையை இன்று(28) சமர்ப்பித்து உரையாற்றுகின்ற போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், கண்காணிப்புRead More →

கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி முன்னெடுக்கப்படுவதாக கூறிக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கையில் பாரபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த வேண்டாமென மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வு பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நேற்று(27) நடைபெற்ற போது உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கையில் பாரபட்சம் காட்டும் செயற்பாடானதுRead More →

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விற்பனை சம்பந்தமான கோப் அறிக்கை வெளியிடப்படும் முன்னர் அது குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை கோப் குழுவுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கோப்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார். பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக கோப் குழுவில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு கருத்துRead More →

மருத்துவ பராமரிப்பு நிலையங்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் மீள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் காப்பகம் ஒன்றில் பணிபுரிந்த தாதி ஒருவர், எட்டு முதியவர்களைக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஒன்ராறியோ அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் விவாதித்த எதிர்க்கட்சித் தலைவர் ஆன்றியா ஹோர்வத், ஒன்ராறியோவில் உள்ள நீண்டகால காப்பகங்களில் சுமார்Read More →

தற்போதய அரசின் சில அரசியல் காரணங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை என்று பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான றோனா அம்புறோஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கனேடிய படைகள் இன்னமும் போரிட்டு வருகின்றன என்ற உண்மையை லிபரல் அரசாங்கம் மறைக்க முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.Read More →

இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரை அவரின் நண்பர் முறைப்பாட்டிற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதிகாலை ஒரு மணியளவில் Lawrence Avenue East மற்றும் Morningside Avenue பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அழைத்து வரப்பட்ட குறித்த நபரை காவல்த்துறையினர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த ஆண் நபரின் தலை மற்றும் கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →