அண்மையில் மறைந்த தமிழின உணர்வாளர் இயக்குநர் – திரு. மணிவண்ணன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுற நடைபெற்றுள்ளது. 22.06.2013 சனிக்கிழமையன்று அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு, வேர்மன்ற் சவுத் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள், தமிழின உணர்வாளர் இயக்குநர் – திரு. மணிவண்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வந்த தமிழ் உணர்வாளர்களின் மலர்வணக்கம் இடம்பெற்றது தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் திரு. வசந்தன்Read More →

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் 15வது தடவையாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 22.06.2013, 23.06.2013 சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் Stovner மைதானத்தில் Star pizza நிறுவனத்தினர் மற்றும் Flamingo pizza நிறுவனத்தினர் ஆதரவில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழ்தேசிய ஒற்றுமையை மேன்மைப்படுத்தவும் எதிர்கால சந்ததிகளின் விளையாட்டுதிறனை ஊக்கிவிக்கவும் நாடாத்தப்படுகின்ற தமிழர் விழாவில் இம்முறையும் அதிகான விளையாட்டு வீர வீராங்கனைகள் அகவை பேதமின்றி கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா குறிப்பாகRead More →

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் இன்று ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.Read More →

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவேRead More →

போரினால் பாதிக்கப்பட்டுக் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் இன்னல்களைச் சந்திக்கும் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு ஜேர்மனி நாட்டில் இயங்கும் “உதவும் உள்ளங்கள்” (Helping Hearts)  அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாகத் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் தலைமையில் இன்று அறிவகத்தில் வைத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இவ் உதவியானது, கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளற்ற, பல மைல் தூரம்Read More →

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான். இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஷாருக்கான் இதற்காக வாடகைத்தாய் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கருவுற்றிருக்கும் அந்த வாடகைத் தாயின் வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதற்காக ஷாருக்கான் வாடகைத் தாயை மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.Read More →

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம்Read More →

சுவிட்சலாந்தின் தமிழர் வளையாட்டு நிகழ்வு லுட்சன் மாநிலத்தில் வெகு விமரிசையாக இடம் பெற்றது தமிழ் மன்றத்தின் வருடாநத விளையாட்டுப் போட்டியாக நடைபெறும் இன் நிகழ்வு சனி காலை 10.00 மணியளவில் தமிழ் மன்றத் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர்… ..திரு மணிவன்னனின் மன்றக் கொடி ஏற்றலுடன் தமிழரின் போராட்ட வாழிவில் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கான அக வணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள்Read More →

கனடாவின் பிரம்டன் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள். காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதுடன், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பையன்களும்,Read More →