பிரிட்டிஷ் கொலம்பியா 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்று அமைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இம்முறை இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை முதல்வர் கிறிஸ்டி கிளார்க் அமைத்துள்ளார். எனினும் அவர் அமைத்துள்ள இந்த அரசு நிலைக்குமா என்பது இன்னமும் சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ள நிலையில், 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்றைய நாள் அவர்Read More →

கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் Ajax பகுதியில் உள்ள 25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். டொராண்டோ இடைத்தங்கல் ஆணையத்தில் டோக்கன்களைப் ( TTC tokens) பெற்றுக்கொள்வதற்காக, போலி கடன் அட்டைகளை குறித்த பெண் பயன்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.Read More →

இலங்கை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கனடா ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை சென்றடைந்தார். கனடா மார்க்கம், பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம்சார்ந்த சந்திப்புகளையும், கனடா அரச மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா சென்றடைந்தார். மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி மற்றும் கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். முதலமைச்சர் நாளை முதல்Read More →

நவம்பர் 27, 2016 சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்! இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால்Read More →

தான் கட்சி மாறுவதை ஒரு அறிக்கை மூலம் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் லோகன் கணபதி. லோகன் கணபதியின் அந்த அறிக்கையால் லிபரல் கட்சியின் மூத்த தமிழ் உறுப்பினர்கள் பலரும் சீற்றம் கொண்டுள்ளதமை இப்போது காணக்கூடியதாக உள்ளது. “சென்ற ஆண்டு லிபரல் கட்சி மைக்கேல் சானின் வெற்றிக்கு லோகன் இரவு பகலாக உழைத்தவர். இப்போது மைக்கேல் சானுக்கு எதிராக அதேதொகுதியில் பழமைவாதக் கட்சிக்குக் கட்சி மாறி வாக்குக் கேட்கின்றார் லோகன் கணபதி; இந்த அரசியல்Read More →

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானதையடுத்து, யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் மத்தியில் பதற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.Read More →

மன்னார் -முத்தரிப்புத்துறை மீனவக் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த கடற்படை சிப்பாயை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் கிறேஸியஸ் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். மன்னார் நகரிலிருந்து தெற்கே 35 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள முத்தரிப்புத்துறை கிராமத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு, கிராம மக்களால் கட்டிவைத்து நையப்புடைத்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால்Read More →

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தனர். இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில்Read More →

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாரதூரமான படுகொலைகள் மற்றும் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்ற முனைவது கவலைக்குரியது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒரு கூட்டத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்படுமென ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் கீழ் அனைத்து குற்றங்களும்Read More →

கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச்Read More →