வடகிழக்கில் ரவுடிகள் வேண்டாம் ஐனாதிபதியிடம் TNA….

sampanthan-300x130வடக்கிலும், கிழக்கிலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக அராஜகங்களை புரிந்துவந்தவர்களை புதிய அரசாங்க நிர்வாகத்தில் இணைக்கக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

 

கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.sampanthan-300x130

வடக்கிலும் கிழக்கிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மீள் வழங்கப்படுதல், நீண்ட தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு கிழக்கில் உள்ள ஆளுனர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட ரீதியாக உள்ள அரசாங்க அதிபர்களை மாற்றுதல், மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் முதலமைச்சருடன், அந்தந்த பகுதிகளில் உள்ள சிரேஷ்ட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இணைத்தலைவராக நியமித்தல் ஆகிய கோரிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

அதேநேரம் கடந்த அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களுக்கு புதிய நிர்வாகத்தில் இடம்தர கூடாது என்றும், நீண்டகால அரசியல் தீர்வு சம்பந்தமாக குழு ஒன்றை உருவாக்கவும் இதன் போது கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான குழுவை உருவக்குவதாகவும், காணி சம்பந்தமாகவும் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.