கனடாவிலும் பிரித்தானியாவிலும் தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவாக தமிழர் திருநாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

unnamed (1)உலகத் தமிழர்கள் அனைவரும் பண்பாட்டுத்தளத்தில் இணைகின்ற பெருநாளான தமிழர் திருநாளினை வெகுசிறப்புடன் கொண்டாடுவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
மதச்சாயமற்று தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஒன்றுபடுகின்ற ஓர் பண்பாட்டு நிகழ்வாக அமைகின்ற தமிழர் திருநாளினை கொண்டாடுவதற்கு பல்வேறு தமிழர் பொது அமைப்புக்களும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.unnamed (1)unnamed
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சு கனடாவிலும் பிரித்தானியாவிலும் இந்நாளினை நிகழ்வரங்காக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக அவ்வமைச்சின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனவரி 16ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு Princess Banquet Hall,3330 Pharmacy Ave(Pharmacy&McNicoll),Scarbrough எனும் முகவரியில் கனடாவிலும், சனவரி 17ம் நாள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு THE ARCHBISHOP LANDFRANC ACADEMY,MITCHAM ROAD,CROYDON, CR93AS எனும் இடத்தில் பிரித்தானியாவிலும் தமிழர் திருநாள் நிகழ்வுகளை நா.தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை புலம்பெயர் நாடுகளில் பல்வேறு தமிழர் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழர் திருநாள் நிகழ்வுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஒத்துழைப்பினையும் உறுதுணையினையும் வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.