மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்

dakkilasssஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிப்பதற்காக சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது.dakkilasssdakklass

எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.