கனடா மருத்துவ மனையில் தமிழ்

canada_tamil_hospitalகனடா டொராண்டோவில் உள்ள ஸ்காபரோ பொது மருத்துவ மனையில் அறிவிப்புகளை ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனம் ஆகிய மூன்று மொழியில் எழுதி வைத்துள்ளார்கள். தமிழில் நாலு வரியில் எழுதியிருப்பதை சீனமொழியில் இரண்டு வரியில் எழுதி விடுகிறார்கள்.

நோயாளிக்கு ஆங்கிலம் தெரியுமா என கேட்டு தெரியாவிட்டால் தமிழ் மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்கிறார்கள்.

மருத்துவ மனையை கோயில் போல வைத்திருக்கிறார்கள். ஒரு தும்பு துரு கிடையாது. ஊழியர்கள் அன்பாகப் பேசுகிறார்கள். நோயாளியின் பெயர், முகவரி, பிறந்த நாள் சரியா என்று ஒருவர் மாறி ஒருவர் சரிபார்க்கிறார்கள். மருத்துவர் வரவேற்பு அறைக்கு வந்து நோயாளியைக் குசலம் விசாரித்து அழைத்துப் போகிறார். பேசி முடித்த பின்னர் அவரே வரவேற்பு அறைவரை கூட்டி வந்து விட்டுவிட்டு அறிவுரை சொல்லி விடை கொடுக்கிறார். இவ்வளவிற்கும் இது ஒரு அரச மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது;

இதேவேளை இலங்கை அல்லது தமிழ்நாட்டில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தும் கூட காவல்துறையில் முறைப்பாடுகளை சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்கிறார்கள். அப்படிபதிவு செய்த முறைப்பாட்டில் கையெழுத்துப் போடுமாறு கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். கையெழுத்து போடும் நபருக்கு அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூட தெரியாமல் கையெழுத்திடும் பரிதாப நிலை காணப்படுகிறது.

canada_tamil_hospital