கனடாவில் சவால்களைக் கடந்து – பிராம்டன் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடி 3 நாள் நிகழ்வுகள்

Eelam-pavalion-tamil (14)

ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் முதன்முறையாக தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி ஈழம் சாவடி இம்முறை அமைகிறது. பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைகிறது. கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இவ் மூன்று நாள் விழாவில் அமையும் 13 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைவது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரிதிநிதிகளும் தெரிவித்தனர்.

31வது ஆண்டாக அமையும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடி வரும் வெள்ளி 12ஆம் நாள் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் சனி 13ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் ஞாயிறு 14ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது.

உணவுச்சாவடிகள் மலிவு விலை வர்த்தகச் சாவடிகள் தமிழர் பாரம்பரிய கண்காட்சிகள் தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து மக்களுக்கும் பெருவிருந்தாக அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி மாலை இறுதி நிகழ்வாக பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும்�� சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகா ரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் நடைபெறவுள்ளன.

பிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர். வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வெள்ளி மாலை 6 மணிக்கு உத்தியோகபூர்வ ஆரம்பத்தின் போது பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஈழம் சாவடி அமைவதற்கு தமது கடும் எதிர்ப்பை சிறீலங்காவின் தூதுவராலயமும் உலகலாவிய சிங்கள கடும்கோப்பாளர்களும் அரச ஆதரவாளர்களும் வழமைபோல் வெளிப்படுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஈழம் என்பது பயங்கரவாதம் என்றும்�� கற்பனைப் பெயர் என்றும்�� பிரிவினைவாதம் என்றும் அனுமதிக்கக்கூடாது என்றும் உலகில் அப்படியொரு நாடே இல்லையென்றும் ஒருபுறமும் ஈழம் என்பது சிங்கள மக்கள் வாழும் நாடு தமிழர்கள் அப்பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்துத் தரப்பிற்கும்�� கடிதம்�� மின்அஞ்சல் தொலைபேசி அழைப்பு என பேரழுத்தம் கொடுப்பதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

எனினும் இச்சிங்களத்தின் கொடூரச் செயலை தமிழ் செயற்பாட்டாளர்கள் மூர்க்கத்துடன் எதிர் கொண்டு வருகின்றனர். அச் செயற்பாட்டாளர் ஒருவருடன் பேசியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்துவரும் சிறீலங்கா அரசின் செயற்பாட்டினாலேயே தமிழர்கள் கனடாவிற்கு இடம் பெயர்ந்தனர். பல்லின மக்களின் சங்கமாக�� மக்கள் உரிமைகளின் உச்சமாக உள்ள கனடாவிலேயே இவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலிக்க முனைந்து நிற்பது கடும் கண்டனத்திற்கு உரியது இதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. இப்புரிதல் பிராம்டனில் அனைத்துத் தரப்பிற்கும்; தற்போது ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

“ஈழம் என்பது நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ்ப்பெயர். தமிழர் சாவடிக்கு என்ன பெயர் வைப்பது என்பது தமிழ் மக்கள் சார்ந்த உரிமை. அதை யாருக்கும் நாம் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்கள் என்ன பெயர் வைப்பது எவ்வாறு செயற்படுவது என்பதைக் கூறும் உரிமை சிறீலங்கா அரசிற்கோ அதன் அடிவருடிகளுக்கோ கிடையாது. இங்கும் எமது உரிமைகளை இவர்களிடம் இழந்துவிட நாங்கள் ஒன்றும் மனிதப்பிறப்பற்ற ஐடங்கள் அல்ல” என்றார் மிகுந்த கோபத்துடன்.

அதேவேளை மிகுந்த புரிதலுடன் முழுமையாக அனைத்து ஒத்தாசைகளையும் வழங்கி வரும் காவல்துறை முதற்கொண்டு மத்திய�� மாநில�� நகர மக்கள் பிரதிநிதிகள் கரபிறாம் விழா அமைப்பாளர்கள் என அனைவரையும் பிராம்டன் தமிழ் மக்கள் மட்டுமன்றி கனடிய தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவில் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இது ஒரு கலாச்சார நிகழ்வு அரசியல் நிகழ்வு அல்ல சிங்கள அரசு ஒரு கலாச்சார நிகழ்வை அரசியலாக்க முனைந்துள்ளதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

சிங்கள அரசு கடந்த காலங்களிலும் பல தமிழர் நிகழ்வுகளை கனடாவில் நடைபெறாது செய்ய முனைந்து தோற்றுப் போனதையும் அவர் இவ்விடத்தில் நினைவு கூர்ந்தார்.

கனடாவில் தமிழர் இருப்பை மீண்டும் ஒருமுறை நிலையாக உறுதிப்படுத்தும் இந்நிகழ்வில் பெரும் அளவில் கலந்து தமிழர் பெருமையைப் பறைசாற்ற கனடா பெரும்பாகத்தில் இருந்து பெருமளவில் கலந்து கொள்ள தமிழ் மக்களும் தயாராகி வருவதாக மேலும் அறியப்படுகின்றது.

இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கடவுச்சீட்டு ஒன்றை 10 டொலர்களுக்கு பெற்றுக் கொண்டு அனைத்து சாவடிகளுக்கும் செல்லலாம் எனவும்�� பிராம்டன் பேரூந்து எனைய சாவடிகளுக்கு கடவுச்சீட்டு உள்ளேரை இலவசமாக அழைத்துச் செல்லும் எனவும் அறியத்தரப்படுகிறது. குறிப்பாக கவாய் சவாடி பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய வாசடி லத்தின் அமெரிக்கா சாவடி போன்றவை அந்நாட்டை சென்று தரிசிக்கின்ற அனுபவத்தை தரவல்லவை எனவும் சொல்லப்படுகிறது. கரபிறாம் பல்கலாச்சார விழாவில் சந்திப்போம் என உரிமையுடன் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர்.