ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

ஸ்காபரோவின் Bay Mills Boulevard மற்றும் Birchmount வீதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதிப் பகுதியில் அமைந்துள்ள Tam O’Shanter குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 5.30 அளவில் பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர் என்றும், கை மற்றும் கால் பகுதிகளில் காயமடைந்த அந்த இருவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.