உயர்நீதிமன்றத்தில் ஞானசார தேரர் மனுதாக்கல்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரியே, ஞானசார தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரின் சட்டத் தரணிகள் ஊடாகவே அவர்,அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸ் குழுக்கல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஞானசார தேரர் தலைமையிலான மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், அம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருகின்றமையால்,அவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.