திஸ்ஸ விதாரணவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சம்பிக்க ரணவக்க!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை சம்பிக்கவே மறைத்து வைத்திருக்கின்றார் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுமத்திய குற்றச்சாட்டை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகச் சிறந்த முக்கிய கட்சிகளாக திகழ்ந்து தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் அனாதைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை. பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவிய அவர்களுக்கு பால் ஊட்டிய, அவர்களுக்கு வாகனம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் இந்தக் கேள்வியை திஸ்ஸ விதாரண எழுப்ப வேண்டும்.

மஹிந்த, கோத்தபாயவிடம் இது பற்றி கேட்க முடியாவிட்டால் அவர்களின் சார்பில் கடந்த காலங்களில் வழக்குகளில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளிடம் இதனைக் கேட்க முடியும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திஸ்ஸ விதாரண தரப்பு இந்தக் குற்றவாளிகளுடனே இருந்ததார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.