சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்

சென் லோறன்ஸ் சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Esplanade ற்கு வடக்கே, Church Streetஇல் வீதிக்கு கீழாக உள்ள நிலக்கீழ் வினியோக மற்றும் கழிவு நீர்ப் பாதைக்கான பகுதி ஒன்றினுள் நேற்று முற்பகல் 9.30 அளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதி மீது அமைக்கப்பட்டிருந்த மூடி சுமார் ஐந்து அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், பாரிய சத்தம் மற்றும் பலத்த அதிர்வினை ஏற்படுத்திய அந்த வெடிப்பின் பின்னர் குறித்த அந்த துளைப் பகுதியில் இருந்து பெருமளவு புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அப்பகுதி ஊடான போக்குவரத்துகளை அதிகாரிகள் தடை செய்ததுடன் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த வெடிப்பு என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அந்தப் பகுதியில் மின் தடை எவையும் ஏற்படவிலலை என்பதால், இது மின்மாற்றிகளால் ஏற்படவில்லை என்று ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

எனினும் அந்த இடத்தில் தங்களின் ஆய்வுப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அந்த வீதி ஊடான போக்குவரத்துகள் பிற்பகல் 1.30 அளிவில் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்.