ஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி! உண்மையை கூறிய திஸ்ஸ

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முக்கிய அரசியல்வாதி ஒருவர் இந்த பிக்குவை மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் மறைத்துள்ள அரசியல்வாதி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், இந்த உண்மையை வெளியிட நேர்ந்தது.

ஞானசார தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது.

இந்த பிக்கு முதலில் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்தவர்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவின் வேட்பாளராக அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.

மேலும் தற்போது ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளராக இருக்கும் ஹெதில்கல்லே விமலசார தேரர், ஆரம்பத்தில் பொதுபல சேனாவுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.