ரொரன்ரோ டவுன்ரவுன் தீ சம்பவம் : உணவகம் தீக்கிரை

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் உணவகம் ஒன்று தீக்கிரையானதுடன், அருகில் இருந்த வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன.

மேற்கு டண்டஸ் வீதி மற்றும் யூனிவேசிற்றி அவனியூப் பகுதியில் அமைந்துள்ள “Ryus Noodle Bar” எனப்படும் உணவத்தில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

பிற்பகல் 1.30 அளவில் உணவகத்தில் ஏற்பட்ட அந்த தீப்பரவல் பின்னர் அருகில் இருந்த வீடுகள் சிலவற்றுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பரவ ஆரம்பித்த தீ, விரைவிலேயே அப்பகுதி முழுவதுக்கும பரவி அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியமையால், கட்டிடத்தின் இரண்டு எல்லைக்ள ஊடாகவும் புகை வெளியானதுடன், நீர் வினியோக வழிகளும் சேதமடைந்த நிலையில், அங்கிருந்த நான்கு தொகுதிகளின் கூரைப் பகுதி வரையில் எரிந்து போயுள்ளதாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் கடுமையான போராட்டத்தின் பின்னர் அந்த தீபரவலை தீயணைப்புப் படையினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த தீ பரவல் சம்பவத்தில் அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.