வேலைவாய்ப்பில் ஆச்சரியமான அதிகரிப்பு

கனடாவில் கடந்த மாதத்தில் புதிதாக முழுநேர வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஆச்சரியகரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் காட்டுகின்றன.

கடந்த மாத புள்ளிவிபரங்களின் படி சுமார் 77,000 பேருக்கு முழுநேர வேலைவாயப்பு கிடைத்துள்ளதுடன், பெருமளவானோருக்கு பகுதி நேர வேலைகளும், வெவ்வேறு வகையிலான வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அளவில் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக் ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதனை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதிகளவானோருக்கு கடந்த மாதத்தில் புதிதாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும், வேலை தேடுவோர் எண்ணிக்கையும் பெருமளவில் வேலைச் சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் வேலையற்றோர் வீதம் 0.1 சதவீதத்தினால் அதிகரித்து, 6.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் கனேடிய பெருளாதாரமும் சிறந்த முன்னேற்றகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிவதாக பொருளியல் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.