மிசிசாகாவில் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோம்

மிசிசாகாவின் கெனடி வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், காவல்த்துறையினர் அது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அந்த வீட்டினுள் இருவர் இருந்த போதிலும், அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், சம்பவம் இடம்பெற்ற அந்த பகுதியில் இருந்து வெற்றுத் தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை குறித்த வீட்டின் வாகன நிறுத்தும் அறைப் பகுதிக்கு மிக அருகில் இருந்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அந்த வீட்டில் இருந்தவர்களிடம் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமது விசாரணைகளுக்கு அவர்கள் ஒத்துளைப்பு வழங்கி வருவதாகவும், காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.