கத்திக்குத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

கத்திக் குத்து்ச சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஆண்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் ரொரன்ரோ நியூ மார்க்கட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் தொடர்புபட்ட ஜோன் ஜான்சன் மற்றும் மைஹர் சராம் ஆகிய இருவருக்குமே ஆயுள் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமான மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 65 வயதான றொனிடி றோஸ்பொறோ என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை தொடர்பில் குறித்த இரண்டு ஆண்கள் மீதும் இரண்டாம்தர கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையிலேயே தற்போது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் ரொரன்ரோ நியூ மார்க்கட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்த கத்திக்குத்துச் சம்பவத்தில இரண்டு பேர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிர் ஒருவர் உயிரிழந்த அதேவேளை, மற்றையவர் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது நபர் மீது கத்திக்குத்து மேற்கொண்ட குற்றத்திற்காக ஜோன் ஜான்சன் மற்றும் மைஹர் சராம் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.