ஸ்டீல்ஸ் அவனியூ விபத்தில் இருவர் படுகாயம்

ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Don Mills வீதி மற்றும் Steeles Avenue பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில், இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருவர் படுகாயமடைந்ததாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும், மற்றையவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தை அடுத்து Don Mills வீதிப் பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தற்போது அவை போக்குவரத்திற்கு மீளத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.