மத்தல விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மஹிந்த

magiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மத்தல விமான நிலையத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் நீண்ட நாட்களாக காணப்பட்ட தேவைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் குறித்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

பெரிய அளவில் பயன்படுத்தப்படாத குறித்த விமான நிலையத்திற்கு இந்த நாட்களில் சில விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதை சீர்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால் இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து செல்வதாக கூறப்படுகின்றது.

மத்தல விமான நிலையத்தில் விமான பறப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில், மஹிந்தவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.