பதில் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஐங்கரநேசன்!

ainkaranவடமாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், இன்று காலை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். வரும் 19 ஆம் திகதி வரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிப்பார்.