யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நினைவு கூரப்பட்ட மாவீரர் தினம்

maaveeraதமிழீழ மாவீரர் நாள் இன்று 27ஆம் திகதி மாலை 6.5 மணிக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.

சிவில் உடையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டம் ஆகியவற்றுக்கும் மத்தியில் இந்த நினைவுகூரல் நடைபெற்றுள்ளது.

தமிழீழ மாவீரர் நாள் இன்றைய தினம் வடமாகாணத்தில் பரவலாக நினைவுகூரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மாலை 6.5 மணிக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தில் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரப்படுவது வழக்கம்.

எனினும் போர் நிறைவடைந்து 7 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் வெளிப்படையாக இன்றைய தினம் மாவீரர்கள் நினைவு நேரமான மாலை 6.5 மணிக்கு ஈகை சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை பல்கலைக்கழக சுற்றாடலில் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ், அதிரடிப்படையின் நடமாற்றம் பிரதான வீதிகளில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.