நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

poolஎட்டு வயதுச் சிறுவன் ஒருவர் நீச்சல் தடாகம் ஒன்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஸ்காபரோவில் இடம்பெற்றுள்ளது.

Warden Avenue மற்றும் Bamburgh Circle பகுதியில் அமைந்துள்ள குறி்தத அந்த நீச்சல் தடாகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் சிறுவனின் உறவினர்களும் நண்பர்களும் இருந்ததாகவும், மீட்கப்பட்ட சிறுவன் சுயநினைவற்ற நிலையிலேயே காணப்பட்டதாகவும், உடனடியாகவே சிறுவனை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை உயிராபத்தான நிலையில் இருந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.