நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை பிரதிநிதியாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழினியன் நியமனம்!

naadu-kadanthaநாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை பிரதிநிதியாக தமிழகம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த த.தமிழினியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு, புலம்பெயர்ந்த தமிழர்கள், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவினர். இந்த அரசின் பிரதமராக உருத்ரகுமாரன் செயல்பட்டு வருகிறார். இந்த அரசுக்கான அரசவைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 5 பேரில் ஒருவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த த.தமிழினியன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் உருத்ரகுமாரன் தமிழினியனை அரசவைப் பிரதிநிதியாக நியமித்துள்ளார். இவர் மாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.