சட்டவிரோத மதுபாவனை விற்பனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி

geneasharajahஅண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான சட்ட விரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருதினால் மாவட்டத்தில் கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்த தன்மை காணப்படுகின்றது.

மாவட்டத்தில் காணப்படும் இவ்வாறான குற்றச் செயல்களை முதல்கட்டமாக தடுத்து நிறுத்துமுகமாக சமூதாய சீர் திருத்த உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன்,

குறித்த சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் தகவல்களை உடனடியாக திரட்டும்படியும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாகர் கணேசராஜா அறிவுத்தியுள்ளார்.

குறித்த சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, கஞ்சா விற்பனை முகவர்கள் போன்றவர்களின் தரவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் சமூதாய சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகவல்களை திரட்டிவருகின்ற நிலையில் வெகு விரைவில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.