ஆபத்தான கட்டத்தில் கோத்தபாய! காப்பாற்றும் முயற்சியில் இரசாயனப் பகுப்பாய்வு அதிகாரிகள்

kothabaya_rajapakse_001பல மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது கோத்தபாய ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு மோசடியில் இருந்து அவரை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகளை, இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள சிலர் ஆரம்பித்துள்ளதாக நல்லாட்சியை நேசிக்கும் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ராஜபக்சர்கள் தங்கள் பெற்றோர்களின் கல்லறை மாளிகையை பொது மக்களின் பணத்தில் நிர்மாணித்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

தங்காலையில் அமைந்துள்ள இந்த கல்லறைக்காக தாழ் நிலப்பரப்பு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபாவை கோத்தபாய ராஜபக்சவின் கையொப்பத்தின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து, வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கோத்தபாய ராஜபக்சவின் கையொப்பத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அரசாங்கத்தின் கையெழுத்து ஆய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கையெழுத்து ஆய்வாளர் மற்றும் உதவியாளர்களாக செயற்படும் படகொட மற்றும் ஜயசுந்தர என்ற மோசடிக்காரர்கள் இருவரை பிடித்துக் கொண்ட ராஜபக்சர்கள் இந்த கையொப்பம் கோத்தபாயவின் கையொப்பம் அல்லவென, போலி சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்ச்சி ஒன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் திணைக்களத்தில் உள்ள நல்லாட்சியை நேசிக்கும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கோத்தபாயவை காப்பாற்றுவதற்கு இந்த நாட்களில் பலருக்கு அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களின் பெற்றோர்களின் கல்லறைகளை கட்டுவதற்கு 11 கோடிகளை செலுத்தியுள்ள கோத்தபாயவின் கையொப்பம் அவருடையதல்ல எனவும், போலி கையொப்பம் எனவும் பணத்திற்காக வேலை செய்யும் அதிகாரிகள் இருவர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில், எந்த பெற்றோரின் கல்லறையை கட்ட இவ்வளவு தொகை பணம் செலுத்தப்பட்டது என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நபர் ஒருவர் பண மோசடி செய்வதற்கு போலி கையொப்பமிட முடியும் எனினும் வேறு நபர்களின் பெற்றோர்களின் கல்லறையை கட்டுவதற்காக போலி கையொப்பமிட வேண்டிய அவசியம் என்ன?

தனது பெற்றோரின் கல்லறையை கட்டுவதற்கு தனது கையொப்பத்தை வேறு ஒருவர் போலியாக இடும் வரையில் கோத்தபாய ராஜபக்ச என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பதே தற்போது பலரின் கேள்வியாக உள்ளது