எனது உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது – ஜனாதிபதி

sri-lanka-president-maithripala-sirisenaதமது அண்மைய உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தாம் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், இந்த உரை திரிபுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை பிழையாக பயன்படுத்தி தம்மீது சேறு பூசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் படைவீரர்கள் தொடர்பிலான தமது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, என்ன விலை கொடுத்தேனும் படைவீரர்களின் நன்மதிப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.