வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் நிர்வாகம் இல்லை! – மஹிந்த யாபா அபேவர்தன

mahinda-yapa-abeywardenaவடக்கு, கிழக்கு பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவி நாட்டின் நிர்வாகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு கிழக்கில் இன்று அரசாங்கத்தின் நிர்வாகம் இல்லை என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன குற்றம் சாட்டினார்.

சமகால நிலைமைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.

நாங்கள் தேர்தலை நடத்த வாக்களிக்கின்றோம். மக்கள் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடத்தி மக்களுக்கு தங்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொள்ள சந்தர்ப்பம் வழங்குங்கள். நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என அவர் கூறினார்