சமகால அரசாங்கத்தை எச்சரிக்கும் நாமல்!

namal_fcid_1சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது. எனினும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அது தொடர்பில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை.

நுகேகொடையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணைந்துக் கொண்டு நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரி சுமையை நாட்டு மக்கள் மீது திணிக்க வேண்டாம். பொருளாதாரத்தை கட்டியொழுப்ப முடியவில்லை என்றால் மக்களை கஷ்டத்தில் தள்ளாமல், முடியவில்லை என்பதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கோப் குழுவின் அறிக்கையில் மோசடிகள் உறுதியாகியுள்ளதென கூறப்பட்டுள்ள நிலையில் அதனை இந்த அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிப்பதை நாம் காண்கின்றோம்.

இந்த அரசாங்கம் பெயரிற்கு நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கூட்டு எதிர்கட்சியினர் குறித்தும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் தேடிக்கொண்டுள்ளது.

இன்று நாட்டிற்கு கூறுவதொன்று, செய்வதொன்றாகும், அத்துடன் ஊடகங்களுக்கு கூறவது ஒன்று செய்வது வேறு ஒன்றாகும்.

இந்த இரட்டை விளையாட்டை நிறுத்துமாறு தாங்கள் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்கின்றோம் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.