மாணவர்களைச் சுட்ட இடத்துக்கு விளக்கமறியலில் உள்ள பொலிசாரைக் கொண்டு வந்து விசாரணை

kokuvil-shootingயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது கடந்த வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று, சம்பவம் நடந்த கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு,அழைத்து வரப்பட்டு, விசாரணை செய்யப்பட்டனர்.

இதன்போது, பொலிஸார் நின்று சுட்ட இடமான குளப்பிட்டி சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரை அவர்கள் சரியாக அடையாளங் காட்டினர். அவர்கள் காட்டிய அடையாளங்களின் அடிப்படையில், நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், வெற்று ரவை ஒன்றும் மீட்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இந்த 5 பொலிஸாரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் சென்றனர். அழைத்து வரப்பட்ட ஐந்து சந்தேகநபர்களான பொலிஸாரில், ஒருவர் மாத்திரம் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அனைத்தையும் அடையாளங் காட்டியமை குறிப்பிடத்தக்கது