யாழ். பொலிஸ்நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

kokuvil-students-shooting_jaffna_police_station_guardயாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானதையடுத்து, யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் மத்தியில் பதற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.