நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படை தளபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

jஅமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் வொஸிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இலங்கை மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கும் இடையில் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.