’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்?’ காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு

ykuyஉத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவ்விவகாரத்தில் வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மொராதாபாத் போலீசார் கூறிஉள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம் எழுப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுதொடர்பாக வீடியோ பதிவை ஆதாரமாக கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று மொராதாபாத் போலீசார் கூறிஉள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆனால் எப்.ஐ.ஆரில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டை மறுத்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் எங்களிடமும் வீடியோ பதிவு ஆதாரமும் உள்ளது, போலீசாரிடம் உள்ள வீடியோவானது திருத்தப்பட்டவை என்று கூறிஉள்ளனர். காவல் நிலைய அதிகாரி துருவ் குமார் பேசுகையில், பேரணியில் தேசத்துரோக கோஷம் எழுப்பட்டதாக போலீஸ் கேள்விப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் செய்தியாளர்களிடம் இருந்து வீடியோ பதிவுகள் பெறப்பட்டது. வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் நாங்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்,” கோஷம் எழுப்பட்டதை கண்டுபிடித்தோம். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்தோம், என்று கூறிஉள்ளார்.

தாகூர்வாரா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமித்குமார் பேசுகையில், ”நாங்கள் புகார் பதிவு செய்து உள்ளோம், நாங்கள் கோஷம் எழுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க விசாரித்து வருகிறோம்,” என்றார். மொராதாபாத் எஸ்எஸ்பி நிதின் திவாரி பேசுகையில், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சிங் பேசுகையில், “கூட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர், அவர்களில் யாரும் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பவில்லை. போலீஸ் வைத்து உள்ள வீடியோ பதிவு திருத்தப்பட்டது. உள்ளூர் சமாஜ்வாடி எம்.எல்.ஏ. நவாப் ஜான் அழுத்தத்தின் பெயரிலே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,” என்று கூறிஉள்ளார்.

ஆனால் சமாஜ்வாடி எம்.எல்.ஏ. இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி நிராகரித்துவிட்டார்.