விக்னேஸ்வரனின் கருத்துக்கு தென்மாகாண சபையில் கண்டனப் பிரேரணை!

tவடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் அண்மையில் யாழ். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு வெளியிட்டும், தென்மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்மாகாண சபை இன்று செவ்வாய்க்கிழமை கே.ஏ. சோமவன்ச தலைமையில் கூடியது.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் ஷம்லி விதானாச்சியினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு, மாகாண சபை உறுப்பினர் அசோக தனவன்சவினால் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.