உலகில் 90 சதவீதம் பேர் மாசு அடைந்த காற்றயே சுவாசிக்கின்றனர்- உலக சுகாதார அமைப்பு

iuஉலக மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்றனர். இதில், பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

உலகின் 103 நாடுகளின் 3000 நகரங்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பு ஒரு கருத்தாய்வு நடத்தி விரிவான புள்ளிவிவர அறிக்கையை தயாரித்து உள்ளது.

அதில் நாடுகளைப் பற்றிய தகவல்கள், வேதிப்பொருள் பரிவர்த்தனை, நில அளவை ஆகியவற்றைக் கொண்டு துணைக்கோளம் மூலம் மிகத் துல்லியமான தகவல்களைச் சேகரித்து உள்ளது

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த பத்திரிகையாளர்கள் உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரிவின் தலைவரான மரியா நீரா சுட்டிக்காட்டினார்.

”மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். அதில் 90 சதவீதம் மரணங்கள் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் நிகழ்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகில் ஆண்டுதோறும் காற்றுத்தூய்மைக்கேட்டால் மரணமடைவோரின் எண்ணிக்கையை 70 லட்சத்தில் இருந்து குறைக்கபட்டு உள்ளது

உலக மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர், உலக சுகாதார அமைப்பால் அனுமதிக்கப்பட்ட 2.5 மைக்ரோ மீட்டருக்கும் அதிகமான மாசுகலந்த காற்றையே சுவாசித்து வருகின்றனர். பொது இடத்தில் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள காற்றுமாசைவிட, வீடுகளுக்குள் நிலக்கரி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, வடகிழக்கு ஆசியாவின் சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.

இந்த பாதிப்பை மக்களின் சுகாதாரம் சார்ந்த அவசர நிலையாக கருதி, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை பரிந்துரைத்து உள்ளது. அதனால், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த, உடனடி நடவடிக்கையை உலக நாடுகள் தொடங்க வேண்டியது அவசியத்தில் உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.