துமிந்தவை விடுதலை செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அச்சுறுத்தல்! மின்னஞ்சல் ஹெக்

uiyபாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தலைமை நீதிபதியாக செயற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவின் தொலைப்பேசி அழைப்புக்கள் கண்காணிக்கப்படுவதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

நீதிபதி ஷிரான் குணரத்னவின் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் இரகசியமாக செவிமடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக தகவல் கிடைத்துள்ளதென, ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விரைவில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பத்திரிகை ஒன்று, நீதிபதி ஷிரான் குணரத்ன அச்சுறுத்தல்களுக்கு சிக்கியுள்ளதனால் இவ்வாறான தீர்ப்பு வழங்குவதற்கு முயற்சிப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததென ஜனாதிபதி சட்டதரணி வரண்குலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சந்திப்பின் போது அவர் இது தொடர்பில் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

அண்மையில் பாரத லக்ஷமன் கொலை தொடர்பில் மூவர் அடங்கிய நீதிபதி குழுவினால் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் துமிந்த சில்வா உட்பட சிலரை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுதலையின் பின்னர் மாற்று பத்திரிகை ஒன்றில் இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஷிரான் குணரத்னவிற்கு அவசியமற்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அச்சுறுத்தலுக்கமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி வெளியாகியதன் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவரது அலுவலக தொலைப்பேசி மற்றும் தனிப்பட்ட தொலைப்பேசிகளில் பெற்றுக் கொள்ளும் மற்றும் அவற்றிற்கு வரும் அழைப்புகள் அனைத்தும் இரகசியமாக செவிமடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது மின்னஞ்சல் ஹெக் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும்.

இதன்மூலம் நீதிபதிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றமை தெளிவாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.