உருகும் பனி – கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என எச்சரிக்கை

uஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டியின் பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது. இதனால் பூமியின் கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்டிக் என்பது புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். ஆர்க்டிக் பகுதியானது ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது.

ஆர்க்டிக் கடல் பனிக்கட்டிகள், குளிர் மற்றும் இலையுதிர் காலத்தில் உறைவதும், கோடை காலத்தில் உருகுவதும் வழக்கமான ஒன்று. அதன்படி தற்போது அங்கு கோடைகாலமாகும்.

இதன் இறுதி பகுதியான செப்டம்பர் மாதமளவில் பனிக்கட்டி உறைந்து விடும். இந்த காலகட்டத்தில் பனிக்கட்டிகளின் பரப்பளவு எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர்கள் கணித்து வருகின்றனர்.

1979ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் பனிக்கட்டிகளின் பரப்பளவை ஆராய்ச்சி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இன்று முதல் நாசாவின் NSIDC எனப்படும் தேசிய வெண்பனி மற்றும் பனிக்கட்டிகளின் தகவல் மையம், ஆண்டுதோறும் ஆர்க்டிக் பனிக்கட்டிகளின் அளவை பதிவு செய்து வருகிறது.

இதன்படி 2016ஆம் ஆண்டு குளிர்காலத்தின் இறுதி பகுதியான செப்டம்பர் மாதம் ஆர்க்டிக் பனிக்கட்டியின் பரப்பளவு இரண்டாவது மிக குறைந்தளவை (41.4 லட்சம் சதுர கி.மீ.,) எட்டியுள்ளதாப ‘நாசா’ தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆர்க்டிக் வரலாற்றில் மிக குறைந்த அளவாக 2012ஆம் ஆண்டு 33.9 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியத்துவம்

உலகின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக் பனிக்கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் பனிக்கட்டிகள் சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்களை 90% சதவீதம் உள்வாங்கிக் கொள்கிறது. இதனால் நமது பூமி குளிர்ந்த நிலையில் வைக்க உதவுகிறது.

மேலும் இங்குள்ள பனிக்கட்டிகள் அதிகளவில் உருகினால் கடல் நீர்மட்டம் உயரும். இதனால் ஆர்க்டிக் கடலை ஒட்டியுள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும் அக்கடல் பகுதியில் உள்ள துருவக் கரடி, திமிங்கலம், கடல்நாய் மற்றும் பென்குயின் போன்ற உயிரினங்கள் அழிவைச் சந்திக்கும்.

10 ஆண்டுகள்

கடந்த 10 ஆண்டுகளில், செப்டம்பர் மாத பருவத்தில் இந்தாண்டு தான் சராசரி அளவை விட பனிக்கட்டி பரப்பளவு குறைந்துள்ளது

இந்நிலையில், இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டி அதிகளவில் உருகும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.