மஹிந்த, கோத்தபாய, விமல் உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் திருடர்களே – பாராளுமன்றத்தில் பகிரங்க உரை

ukஉண்மைகளை வெளிப்படுத்தும் போது அனைவருக்கும் வலிக்கத்தான் செய்யும் ஆனால் அதற்காக உண்மைகளை தெரிவிக்காமல் இருக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற ஒன்று கூடலின் போது கடந்த மஹிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டார். இதன் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆரம்பம் முதலாகவே கூச்சலிட்டு அவருடைய உரையினை தடுக்க முயன்றனர் ஆனாலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றினார்.

இதன் போது விமல் வீரவன்ச கூச்சலிட்டதால் “ஐந்து சதத்திற்கும் பெறுமதி இல்லாத விமல் திருடன் இங்கு கூச்சலிடுகின்றார் அவருடைய கூச்சலை நிருத்த வேண்டும்” என அவர் கடுமையாக கூறினார்.

மஹிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தையும் நான் கூறுவேன் உண்மைகள் கூறினால் அனைவருக்கும் வலிக்கும் அதனால் எவரும் கோஷமிட வேண்டாம். கூச்சலிடுபவர்கள் அனைவரும் திருடர்களே அதனாலேயே உங்களுக்கு கோபம் வருகின்றது.

இவ்வாறு கோஷமிடும் நீங்கள் அனைவரும் திருடர்களே நான் பகிரங்கமாக கூறுவேன் மஹிந்த திருடன், கோத்தபாய திருடன், மஹிந்தவின் குடும்பத்தார் அனைவரும் திருடர்களே, ராஜபக்ஷர்கள் அனைவரும் திருடர்களே எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மீண்டும் அந்த திருடர்கள் ஆட்சியமைக்க பல்வேறு வகையாக நல்லாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களின் தேவை சுயநலமும், தான் ஊழல்களை செய்து கொண்டு சம்பாதிக்க வேண்டும் என்பதே கடந்த ஆட்சியில் அவை சுதந்திரமாக நடந்தது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறைவாசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார “ஊழல்கள் செய்தவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் ராஜபக்ஷர்கள் என பொதுவாக குறிப்பிடுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த பொன்சேகா அவ்வாறு பயந்து கூற வேண்டிய அவசியம் இல்லை ஊழல் செய்தவர்கள் அனைவரின் பெயர்களையும் வெளியிடுவேன். திருடர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தியவர் மஹிந்த.

கோத்தபாய, நாமல் போன்றவர்கள் அதில் முக்கியமான திருடர்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள் அனைவரும் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்துகளுக்கு கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்ததுடன் கூச்சலிட்டு அவருடைய உரையை குழப்பியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.