ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

iuoioஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா பணியகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கிக் கூறியதாக தெரியவருகிறது.

அதேவேளை, நியூயோர்க்கில் தங்கியிருக்கும் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.